மோடி கிருஷ்ணபகவானுக்கு இணையானவர். ராகுல்காந்தி மனநிலை சரியில்லாதவர். பாஜக எம்.பி

sakshiகிறிஸ்துவ மற்றும் முஸ்லீம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அவ்விரு மதத்தினர்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும், இந்து பெண்கள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாரதிய ஜனதா எம்.பி சாக்சி மகராஜ் நேற்று ராகுல்காந்தி குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று உத்திரபிரதேச மாநிலம் எத்தா என்ற நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.பி சாக்சி மகராஜ்,  “ராகுல்காந்தி விவசாயிகள் பிரச்னை குறித்து பேசி வருவதை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்ட சாக்சி மகராஜ், கோதுமை மற்றும் சோள பயிர்களுக்கிடையில் உள்ள வித்தியாசங்கள் கூட தெரியாத ராகுல்காந்தி விவசாயிகள் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளதாக கூறினார்.

மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியை கிருஷ்ண பகவானுக்கு இணையானவர் என்று கூறிய சாக்சி மகராஜ் திரவுபதி இக்கட்டான நிலையில் இருந்த போது கிருஷ்ணன் காத்தது போல் நேபாளத்தை காக்க மோடி வந்திருப்பதாக கூறினார். சாக்ஷியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply