வங்கியில் பணம் எடுக்கும் அளவில் திடீர் மாற்றம். சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததில் இருந்து செல்லாத நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்களை பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தினமும் ரூ.4500 வரை வங்கியில் இருந்து பெற்று கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்றும் அதிகம் பேர் பணம் எடுக்க வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
மேலும் திருமணங்களுக்கு 2.5 லட்சம் வரை மணமகன், மணமகள் அவர்களது தாய் தந்தை கணக்குகளில் இருந்து மட்டுமே எடுக்க முடியும் என்றும் பதிவு செய்த வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்படும் என்றும் விவசாயிகள் 25 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.