சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியுமா?

yantra-product

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட செயல்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு. சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன.

அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும் போது எப்படி தீய செயலை செய்கிறதோ மந்திரங்களும் அதே போல் தீய செயல்களையும் செய்ய வல்லன.நெருப்பினைக் கொண்டு தீபத்தினைஏற்றுவதா அல்லது வீட்டினைக் கொளுத்துவதா என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான் மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம் பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய காரியத்திற்கு பயன்படுத்தினால் அது தீமையையும் தர வல்லது.

மாந்திரீக சக்தி மூலம் நாம் 1. வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம்7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். அஸ்டகர்மத்தில் உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள், பூசை முறைகள், அமரும் இருக்கை, பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்), யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம் போன்றன தனித்தனியே அமையும்.

யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும். இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்

Leave a Reply