சல்மான்கான் கார் மோதிய வழக்கு. மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சல்மான்கான் கார் மோதிய வழக்கு. மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
salman
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கார் மோதிய வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் அவர் விடுதலை செய்யப்படுவதாக மும்பை ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த 2002, செப்.28ம் தேதி அதிகாலை நடிகர் சல்மான்கான் ஓட்டி வந்த கார், பாந்த்ராவில் அவரது வீட்டின் அருகில் உள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் லாண்டரி அருகில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்கில் ஜாமீன் மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனிடையே, மும்பை ஐகோர்ட்டில் இந்த வழக்கை நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி விசாரித்து வருகிறார். மனு மீது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பு சல்மான்கான் குற்றவாளி என்று நிரூபிக்க தவறிவிட்டதாக ஐகோர்ட்  நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்

Read in English this news please go to http://www.chronicletodaynetwork.com/salman-khan-can-not-be-convicted-based-on-current-evidence-bombay-hc/

English Summary: Salman Khan cannot be convicted in the hit-and-run case: Bombay high court

Leave a Reply