உத்தரபிரதேசத்தில் பரவிய உப்பு வதந்தி. பொதுமக்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் பரவிய உப்பு வதந்தி. பொதுமக்கள் அதிர்ச்சி

கிட்டத்தட்ட உலகில் மிக சுலபமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும் பொருள் உப்புதான். ஆனால் அந்த உப்பு இல்லையென்றால் 1எந்த உணவும் சமைக்க முடியாது. இதை மனதில் வைத்து நேற்று மாலை ஒருசில சமூக விரோதிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புத்தட்டுப்பாடு உள்ளதாகவும் இன்னும் ஒருசில நாட்களுக்கு உப்பு கிடைக்காது என்றும் வதந்தியை பரப்பிவிட்டனர். இதனால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உப்பு வதந்தியை உண்மை என நம்பி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று உப்பை வாங்க ஆரம்பித்தனர். இந்த வதந்தியை பயன்படுத்தி கொண்ட வணிகர்கள் ஒரு பாக்கெட் உப்பை ரூ.200 வரை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வதந்தி மிக வேகமாக பரவுவதை அறிந்ததும் உ.பி முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “உத்தரப்பிரதேசத்தில் போதிய உப்பு கையிருப்பில் உள்ளது. அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால் உடனே கொள்முதல் செய்து, விநியோகிக்க முடியும். எனவே, உப்புக்குத் தட்டுப்பாடு எனப் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். உப்பின் விலை எப்போதும் போல இயல்பாகவே நீடிக்கும்’ என்று கூறியிருந்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply