என்றும் இளமையோடு காட்சியளிக்க உப்பு நீர் குளியல்

1929b5b9-8ca8-4f31-a3f4-8679636c0b74_S_secvpf

உப்பு தண்ணீர் தொடர்ந்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும். இது சருமத்தை மென்மையாக்கும். இது சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும். உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் நல்லதாகும்.

உப்பு தண்ணீரில் உள்ள மெக்னீசியம் அந்த நீரை உங்கள் சருமத்துடன் இணைக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும அணுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். உப்பு தண்ணீரில் குளித்து வந்தால் தசைப்பிடிப்பு தொடராமல் இருக்கும். மேலும் கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் விளையாடுவதால் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் தசை வலிகள் மற்றும் பிடிப்புகளுக்கு சிகிச்சை அளித்திடும்.

உங்கள் சருமத்தை உகந்த அளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு வழி தான் இறந்த சருமத்தை நீக்குவது. பாஸ்பேட் போன்ற சில வகையான உப்பு தண்ணீர் குளியல் டிடர்ஜெண்ட் போன்ற எதிர்வினையை உண்டாக்கும். மரத்துப் போன சருமத்தை மென்மையாக்கவும், இறந்த சருமத்தை நீக்குவதிலும் இது உதவும்.

சுத்தமான மற்றும் இயற்கையான வடிவத்தில் பயன்படுத்தும் போது, உப்பு தண்ணீர் குளியலில் அதிக கனிமங்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உப்பு குளியல் உதவிடும்.

வெதுவெதுப்பான நீர் சரும துளைகளை திறக்கும். இதனால் கனிமங்கள் ஆழமாக உள்ளிறங்கி, மிக ஆழமாக சுத்தப்படுத்தும். இதனால் உங்கள் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

Leave a Reply