மாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாடி அறிவிப்பு
சமீபத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் மாயாவது கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்திய நிலையில் பாராளுமன்ற தேர்தல் உள்பட இனிவரும் தேர்தலில் மாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும் என்றும் சமாஜ்வா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் மிகவும் நாகரீகமாக செயல்படக்கூடியவர். அவரது மகன் அகிலேஷ் யாதவ் அவரையும் விட மிகச்சிறந்த நாகரீகத்துடன் நடந்து கொள்கிறார்.
கோரக்பூர், பல்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது மாயாவதியும் அகிலேசும் சுமூகமான பேச்சில் ஈடுபட்டனர். அவர்கள் சந்திப்பு அமைதியும், மிகுந்த ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது.
அதனால்தான் இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி கிடைத்தது. எனவே சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி நீடித்து நிலைக்க வேண்டும். இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டால் அது இரு கட்சிகளுக்கும் நிச்சயம் தோல்வியைத்தான் தரும்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சேர்ந்து போட்டியிட வேண்டும். இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதிப் பங்கீடு மரியாதைக் குரிய வகையில் இருக்க வேண்டும்.
மாயாவதியின் பலத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல எங்களுக்கு இருக்கும் பலத்தை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.