முதன்முறையாக இரட்டை வேடத்தில் சமந்தா.

samanthaஐ’ படத்தை அடுத்து சீயான் விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நேபாள நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு நேபாள டிரைவர் வேடம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் முதன்முதலாக சமந்தா இரண்டு கெட்டப்களில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு சமந்தா வழக்கமான நகரத்து பெண் வேடத்திலும், மற்றொரு சமந்தா நேபாள கிராமத்து கேரக்டரில் நடிக்கிறாராம். நேபாள பெண் என்பதால் அவருக்கு நேபாள நாட்டிலேயே வித்தியாசமான காஸ்ட்யூம்களை படக்குழுவினர் வாங்கியுள்ளதாகவும், அந்த காஸ்ட்யூமில் சமந்தா நிஜமாகவே நேபாள கிராமத்து பெண்ணை போல இருந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Leave a Reply