படப்பிடிப்பின்போது சமந்தாவுக்கு காயம்: மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகை சமந்தா படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
சமந்தா தற்போது குஷி என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் சமந்தா மற்றும் விஜய்தேவரகொண்டா ஆகிய இருவரும் பைக்கில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது
அப்போது திடீரென பைக் கவிழ்ந்ததை எடுத்து இருவருக்கும் முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன