சமந்தா திருமண தேதி அறிவிப்பு?
கோலிவுட், டோலிவுட் என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
சமந்தா-நாகசைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
மேலும் இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாச்சார முறைப்படி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஜய்யுடன் ‘தளபதி 61’, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த கமிட்மெண்ட்டுகளை சமந்தா முடித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.