விஜய் மற்றும் சமந்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஏ.ஆர்.முருகதாஸ் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
நேற்று ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியின் இடையில் அரைநிமிடம் மட்டுமே வரும் ஒரு கிளாமர் காட்சியை படமாக்கிக்கொண்டு இருந்தனர். சமந்தா இதுவரை நடிக்காத அளவிற்கு மிகவும் கிளாமராக உடையணிந்து படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தார்.
விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக நடிக்கப்போகும் தகவல் படக்குழுவினர்களில் ஒருவரிடமிருந்து சித்தார்த்துக்கு ரகசிய எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாம். உடனடியாக சித்தார்த், சமந்தாவிற்கு போன் செய்து விஜய்யுடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்றும், அப்படி மீறி நடித்தால் நம்முடைய உறவு முறிந்துவிடும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சமந்தா, படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே கிளம்பிவிட்டார்.
படப்பிடிப்பின்பொது திடீரென சமந்தா காணாமல் போனதால், விஜய் முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட முருகதாஸ், படப்பிடிபை கேன்சல் செய்தார். சமந்தா மற்றும் சித்தார்த்தை சமாதானபடுத்திவிட்டு இன்று அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.