விஜய்சேதுபதியுடன் முதல்முதலாக இணையும் சமந்தா
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதும் வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர்கள் நிவின் பாலி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க தற்போது சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. ‘தெறி’ படத்தை அடுத்து தனுஷுடன் ‘வடசென்னை’ மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், விஷாலுடன் ‘இரும்புத்திரை’ என கமிட் ஆன சமந்தா தற்போது முதல்முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.