தயாரிப்பாளர் ஆகிவிட்டார் சமந்தா
நடிகைகள் தயாரிப்பாளர் ஆவது என்பது அரிதினும் அரிதாக நடைபெறும் நிகழ்ச்சியாக கோலிவுட்டில் கருதப்படுகிறது. வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஒருசில நடிகைகளே தயாரிப்பாளராக ஆகியுள்ள நிலையில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகை சமந்தா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
இயக்குனர் பவன்குமார் கன்னடத்தில் இயக்கி வரும் ‘யூ டர்ன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகை சமந்தா வாங்கியுள்ளதாகவும், இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை அவரே தயாரித்து நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்கும் இயக்குனர் உள்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.