சென்னை விமானத்தில் வந்த சாம்சங் போனில் தீ. பெரும் பரபரப்பு
சாம்சங் கேலக்ஸி நோட்-7 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வெடித்தும், தீப்பிடித்தும் வருகிறது. இதனால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் சாம்சக் கேலக்ஸி நோட்-7 விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்றில் திடீரென உடைமைகள் வைக்கும் பகுதியில் இருந்து புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக உடைமைகளை சோதனை செய்த போது ஒரு பெண் பயணியின் உடைமைக்குள் வைக்கப்பட்டிருந்த சாம்சங் கேலக்ஸி நோட்-2 என்ற ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்ததை கண்டனர். உடனடியாக தண்ணீரால் அந்த தீ அணைக்கபட்டு விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் விமானம் இறங்கும் சென்னை விமான நிலையத்தில் அவசரகால ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் புகார் செய்யப்பட்டது. சாம்சங் செல்போன் தீப்பிடித்த விவகாரம் குறித்து 26-ந்தேதி நேரில் விளக்கம் அளிக்குமாறு சாம்சங் நிறுவனத்துக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.