சூர்யாவை அடுத்து விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்

சூர்யாவை அடுத்து விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்

samuthirakaniசூர்யாவின் ‘மாஸ்’ படத்தில் வில்லனாக கலக்கிய சமுத்திரக்கனிக்கு அதேபோன்ற வில்லன் கேரக்டர்கள் அதிகம் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து வில்லனாக நடிப்பதை தவிர்த்து வந்த சமுத்திரக்கனி தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க சம்மத்தித்துள்ளார். தன்னுடைய நடிப்புக்கு சரியாக தீனி போடும் வகையில் இந்த கேரக்டர் அமைந்துள்ளதால் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நலன்குமாரசாமி தனது முதல்படமான ‘சூது கவ்வும்’ என்ற படத்தை வெற்றிப்படமாக்கிய நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் சமுத்திரக்கனியின் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதியும், சமுத்திரக்கனியும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் பாடல் வெளியீட்டு தேதி உள்பட அனைத்து அறிவிப்புகளும் வெளிவரும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Leave a Reply