SanDisk நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான மெமரிகார்டு, பென்டிரைவ் போன்ற நினைவக சாதனங்களை தயாரித்து வருகிறது.
இது 128GB மெமரி கார்டுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போது, 200GB மெமரி கார்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் வெளியிட உள்ள இந்த 200GB கார்டானது, ஏற்கனவே உள்ள கார்டை விட 56% அதிகமாகும்.
இதற்கு முன்பு 2GB, 4GB, 8GB, 16 GB, 32GB, 64GB மற்றும் 128GB என வரிசையாக பல வகை கொண்டுள்ளது. 256GB தயாரிப்பு பணிகளில் இறங்கிய இந்நிறுவனம், அந்த முயற்சிகள் தோல்வியடைந்து, 200GB தொழில்நுட்பத்தில் இறங்கியது.
இந்த கார்டு நிமிடத்திற்கு 1,200 புகைப்படங்களை பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இவ்வருடத்தின் பிற்பாதியில் வெளியாக உள்ள இதன் விலை $400 இருக்கலாம் என்று கூறப்படுகிறது.