உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: சானியா-ஹிங்கிஸ் ஜோடி இறுதிக்கு தகுதி
சிங்கப்பூரில் தற்போது உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் டாப் 8 ஜோடிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சீனாவின் வாங்சிங் மற்றும் தைபையின் யங்ஜன் சான் ஜோடியை எதிர்த்து ஆடியது.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்த ஜோடி தொடர்ச்சியாக 21வது வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.