பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி: சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் சுவிட்சார்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த டபிள்யூ.டி.ஏ. இறுதிச் சுற்று என்று என்றழைக்கப்படும் பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் உலகின் முதல் 8 இடங்களை பெற்ற வீராங்கனைகள் பங்கேற்று ஆடி வந்தனர்.
டபிள்யூ.டி.ஏ இரட்டையர் போட்டியில் 50-ஆவது பட்டத்தை கைப்பற்ற இன்னும் ஒரு வெற்றியே தேவை என்ற நிலையில், இந்தியாவின் சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருஸா – கர்லா சௌரஸ் நவரோவா ஜோடியை எதிர்த்து விளையாடியாது. ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய , சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முகுருஸா – கர்லா சௌரஸ் நவரோவா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டில் இறுதிப் போட்டி ஆட்டத்திற்கு முன்னேறிய 10-ஆவது தொடர் இதுவாகும். வெற்றி பெற்ற சானியா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
English Summary : Sania Mirza-Martina Hingis Crowned Champions at WTA Finals