14 நாட்கள் பரோல் முடிந்தது. மீண்டும் சிறை சென்றார் சஞ்சய்தத்.

sanjay dutt
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட 14 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததால் அவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு சென்று சரண் அடைந்டார்.

1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, பின்னர் அந்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக‌ ஏ.கே.56 ரக துப்பாக்கியை வைத்திருந்ததும், குண்டு வெடிப்புச் சம்ப வத்தின்போது அதனை எரித்து விட்டதற்காகவும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது.

சிறையில் இருந்த சஞ்சய்தத் சில நாட்களுக்கு முன்னர் தனக்கு பரோல் வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். இந்த மனுவினை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள் அவரை 14 நாள் பரோலில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.

பரோல் முடிந்து நேற்று சிறை செல்ல வேண்டிய சஞ்சய்தத், தனது பரோலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மீண்டும் மனு செய்தார். ஆனால் இது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் நேற்று மாலை மீண்டும் ஏர்வாடா சிறைக்கு சென்று சரண் அடைந்தார். சிறை அதிகாரிகள் அவரை சிறையில் வைத்து பூட்டினர்.

Leave a Reply