சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு

sankaranarayana-temple-sankarankovil-harihara

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் முக்கிய திருவிழாவான ஆடித்தபசு இன்று மாலை நடக்கிறது. இன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு செல்வார். இன்று மாலை 4.30 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும், அங்கு மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழா நடக்கிறது. இரவு 12 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி வெள்ளியானை வாகனத்தில் எழுந்தருளி தெற்குரதவீதியில் அம்பாளுக்கு காட்சிதரும் இரண்டாவது தபசுக்காட்சி நடக்கிறது.

Leave a Reply