சாரங்கபாணி கோவில்
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3-வது தேசமாக கும்பகோணம் சாரங்கபாணி கோவில் திகழ்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கைஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் என்ற சிறப்பும¢ உடையது.
இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களுள் சங்கரமண பிரம¢மோற்சவ விழா (தைபொங்கல் தேரோட்ட விழா) சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி செம்பினால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட விமானத்தில் இரவு பெருமாள் வீதி புறப்பாடு நடைபெற்றது.
தேரோட்டம்
இன்று(வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கு வீதி புறப்பாடும், இரவு வெள்ளி சூர்ய பிரபையிலும், நாளை(சனிக்கிழமை) இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும¢ சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 10-ந் தேதி காலை பல்லக்கு வீதிஉலாவும், மாலை வெள்ளி கருடசேவையும், 11-ந் தேதி காலை பல்லக்கு வீதி புறப்பாடும், இரவு வெள்ளி அனுமந்த வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெறுகின்றன. 14-ந் தேதி காலை வெண்ணைத்தாழி சேவையும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும், 15-ந் தேதி தைப் பொங்கலன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
வருகிற 16-ந் தேதி காலை பெருமாள் திருவடித் திருமஞ்சனமும், திருவாராதனம் கண்டருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மதியழகன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.