சரண்யா உடம்பு குண்டானதுதான் இப்ப முக்கியமான பிரச்சனையா? பதிலடி கொடுத்த கணவர்

சரண்யா உடம்பு குண்டானதுதான் இப்ப முக்கியமான பிரச்சனையா? பதிலடி கொடுத்த கணவர்

விஜய் நடித்த வேலாயுதம், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி உள்பட பல படங்களில் நடித்த நடிகை சரண்யாமோகன் சமீபத்தில் தனது குண்டான உடலுடன் கூடிய புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த சரண்யா இப்படி ஆகிட்டாரே என்று கலாய்த்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரண்யா மோகன் தனது ஃபேஸ்புக்கில், ‘நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சரண்யாமோகனின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் இன்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியபோது, ‘நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை. என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு வெயிட் போட்டதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply