சரத்பவாருக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் குமார் அவர்களுக்கு தற்போது 81 வயது. இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நவம்பர் 2ஆம் தேதி வரை அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
மேலும் மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.