சரத்குமாருக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரையில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்கு சரத்குமார் செல்ல திட்டமிட்டிருந்தார். மதுரைக்கு அவர் கிளம்ப தயாராகி வந்தபோது திடீரென சரத்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக ரத்குமார் தனது மதுரை பயணத்தை ரத்து செய்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தோல்வி, கட்சி இரண்டாக உடைந்தது, திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வி என இறங்குமுகமாக உள்ள சரத்குமாருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது தரப்பு கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.