மீண்டும் அதிமுக கூட்டணி. முதல்வரை சந்தித்தார் சரத்குமார்

மீண்டும் அதிமுக கூட்டணி. முதல்வரை சந்தித்தார் சரத்குமார்

sarathkumarஎங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்திவிட்டு அதிமுக தூக்கியெறிந்துவிட்டது என்று கடந்த சில நாட்களுக்கு முன் குற்றஞ்சாட்டி அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற சரத்குமார் கட்சி நேற்று திடீரென அதிமுக கூட்டணியில் தன்னை இணைத்து கொண்டது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு விருப்பதின் பேரில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதோடு, அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சமத்துவ மக்கள் கழகம் உருவானது. இந்த கட்சியும் அதிமுகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த நிலையில் தமிழக பாஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, சரத்குமார் நேரில் சந்தித்து பேசி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார்.

ஆனால் நேற்று திடீரென அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதாக தெரிவித்தார். நேற்று தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததால் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Leave a Reply