முதல்வரை சந்தித்தது ஏன்? சரத்குமார் விளக்கம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திடீரென சந்தித்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் சந்திப்புக்கு பின்னர் அ.தி.மு.க-வில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பசுமைவெளிச் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்தில், இன்று எடப்பாடி பழனிச்சாமி – சரத்குமார் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் என்று பார்க்காமல், இந்திய மீனவர்கள் என்று பார்க்க வேண்டும். நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அ.தி.மு.க-வில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அ.தி.மு.க அணிகள் இணைந்து செயல்பட வேண்டும். முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்துப் பேசினேன்’ என்றும் தெரிவித்தார்.