நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாள் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாள், கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். நேற்று பிற்பகல் 1 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது.