நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி சஸ்பெண்ட். நாசர் அதிரடி முடிவு

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி சஸ்பெண்ட். நாசர் அதிரடி முடிவு
sarath kumar complaint
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த சரத்குமார் உள்பட மூன்று பேர் நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார்,ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் சங்கத்தின் கணக்குகளை சரிவர ஒப்படைக்கவில்லை என ஏற்கனவே புதிய நிர்வாகிகள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள நிலையில் சங்கத்தில் பலகோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாப்பட்ட சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், அவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து குற்றமற்றவர்கள் என நிரூபிக்கும் வரை இந்த சஸ்பெண்ட் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்களான கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

புதிய நிர்வாகிகளின் இந்த அதிரடி முடிவு கோலிவுட் திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும் அதற்கு நிதி திரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

Leave a Reply