பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் நாட்டின் தோற்றமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். வெங்கையா நாயுடு

நேருவுக்கு பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் நாட்டின் தோற்றமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். வெங்கையா நாயுடு
patel
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் பதவியேற்றிருந்தால், நாட்டின் தோற்றமே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற சர்தார் வல்லபபாய் படேலின் 140ஆவது பிறந்த தின விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நமது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நினைப்பதைப் போல, சர்தார் வல்லபபாய் படேல் நாட்டின் முதல் பிரதமராகியிருந்தால், நாடே தற்போது வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்ற கருத்து எனக்கும் உள்ளது.

பல்வேறு மாகாணங்களையும், சமஸ்தானங்களையும் நம் நாட்டோடு இணைக்கும் பணியை அவர் ஒற்றை நபராகச் செய்தார். நாட்டின் ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய பணியை நாங்கள் முன்மாதிரியாக கொண்டுள்ளோம். இதேபோல், வல்லபபாய் படேல் காட்டிய பாதையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் ஊக்குவிக்கிறோம்’ என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அமீத் ஷா பேசுயதாவது: நமது நாடு, நூற்றுக்கணக்கான சிறிய சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்தது. சர்தார் வல்லபபாய் படேல் மட்டும் இருந்திருக்காவிட்டால், அந்தப் பிரச்னையில் இருந்து நாம் மீண்டிருக்க முடியாது. இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அவரே காரணமாவார்’ என்று கூறினார்.

முன்னதாக அமித் ஷா, கட்டிஹாரில் உள்ள சர்தார் வல்லபபாய் படேலின் மார்பளவு உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply