சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து”

12249963_1066169260068729_3857824874683954036_n

மோட்ஷத்தை அடைய வேண்டுமானால் தர்மம் (புண்ணியம்) செய் என கண்ணன் அர்ச்சுனனுக்கு சொல்கிறான். அப்போது அர்ச்சுனன் “தர்மம் செய்தால் அதன் பலம் எனக்கு கிட்டிவிடுமே, அப்புறம் நான் மோட்சத்துக்கு போவது எப்படி?” என்று கேட்டான். அப்படியானால் தர்மம் செய்யாதே என கண்ணன் சொன்னான். தர்மம் செய்யாமலிருந்தால் மோட்ஷம் போக முடியாதே என்றான் அர்ச்சுனன். சிலர் நினைக்கக் கூடும் ‘இதென்ன கண்ணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறானே, தர்மம் செய் என்கிறான், பின் செய்யாதே என்கிறான்’…. கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். மோட்ஷத்தை கொடுப்பவன் நானே. மோட்சத்துக்கு உன்னை அனுப்ப வேண்டுமானால், எனக்குப் பிடித்ததை நீ செய்யவேண்டும். ஆனால் அதை உன்பொருட்டு செய்யக்கூடாது. அதாவது தர்மத்தை செய், ஆனால் ‘நான் செய்கிறேன்’ என்ற நினைப்பில்லாமல் செய். தர்மத்தை செய் ஆனால் அதன் பலத்தை என்னிடம் விட்டுவிடு. இதுவே “சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து”

Leave a Reply