புழல் சிறையா? திகார் சிறையா? அதிமுகவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாட தமிழ் அமைப்புகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விரைவில் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறதாம்
இதற்காக கர்நாடக அரசிடம் சசிகலா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பை காரணம் காட்டி இந்த மாற்றம் வேண்டும் என்பதுதான் சசிகலா தரப்பின் வாதம்
ஆனால் இதற்கு கர்நாடக தமிழ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்களாம். பாதுகாப்பு இல்லை என்று சசிகலா கருதினால் அவருக்கு திகார் ஜெயில்தான் சரியான இடம் என்று கூறுகின்றார்களாம்.
அதுமட்டுமின்றி சென்னை சிறைக்கு மாற்றினால், ஊழல் குற்றவாளிக்கு கூடுதல் சலுகையை அளித்ததுபோல ஆகிவிடும் என்றும் இதற்கு, கர்நாடக அரசு துணை போக வேண்டாம்’ என்றும் கர்நாடக தமிழ் அமைப்புகள் தெரிவித்தனர். இதையும் மீறி புழல் சிறைக்கு மாற்றும் வேலைகள் நடந்தால், தொடர் போராட்டங்களை நடத்தவும் கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் நடந்து வருகிறது.