விசுவாசமாக இருங்கள். நல்ல எதிர்காலம் உண்டு. சசிகலா அறிவுரை
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா, கடந்த ஐந்து நாட்களாக கட்சியினர்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.
கட்சியினர்களிடம் சசிகலா, ‘‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சென்று சேர வேண்டும். அந்த திட்டங்கள் குறித்து மாதந்தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். நமக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது. இணைந்து செயல்பட வேண்டும்.
கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். விசுவாசமாக இருந்தால் உங்கள் எதிர் காலம் நன்றாக இருக்கும் என சசிகலா கூறியதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
கட்சியினர்களை அடுத்து அதிமுக பேச்சாளர்களிடம் பேசிய சசிகலா, ‘‘இங்கு முன்னாள், இன்னாள் என்ற பாகுபாடு வேண்டாம். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். நீங்களும் என்னுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.
மேலும் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கட்சியின் அனைத்து பேச்சாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.