சிறைக்கு வெளியே பர்சேஸ் செய்துவிட்டு திரும்பும் சசிகலா: புதிய வீடியோ ஆதாரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் தண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா மற்றும் இளவரசி சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்றதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த தகவலை ஏற்கனவே வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபா இடமாற்றாம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சற்றுமுன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே திரும்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த வீடியோவில் இருவரும் சாதாரண உடையில் உள்ளே திரும்பும் காட்சி மிகத்தெளிவாக இருப்பதால் இருவரும் வெளியே சென்றது ஊர்ஜிதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து சிறை அதிகாரிகள் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=vvha6lo4wEk&feature=youtu.be