சசிகலா விடுதலையா? தொடர் சிறையா? சீராய்வு மனு இன்று விசாரணை

சசிகலா விடுதலையா? தொடர் சிறையா? சீராய்வு மனு இன்று விசாரணை

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின்படி மேற்கண்ட நால்வரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் மற்ற மூவருக்கு மட்டும் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் சசிகலா இளவரசி , சுதாகரன் ஆகிய மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாகக்ல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வருகிறது.

சிராய்வு மனுவில் வாதம், பிரதிவாதம் இருக்காது, மனுமீதான தீர்ப்பு மட்டுமே இருக்கும். எனவே இன்று சசிகலாவுக்கு தொடர் சிறையா? அல்லது விடுதலையா? என்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது சட்ட வல்லுநர்கள் மற்றும் இந்த வழக்கின் வழக்கறிஞர்கள் இதுகுறித்து கருத்து கூறும்போது சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

Leave a Reply