பொதுச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம்

பொதுச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம்

தமிழக முதல்வர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக பதவியேற்றார். பின்னர் முதல்வர் பதவியிலும் அவர் அமர விரும்பிய நேரத்தில் சசிகலாவின் நடவடிக்கைகளை எதிர்த்து தனி அணியாக பிரிந்தார்.

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்றது சட்டப்படி செல்லாது என்றும் அவர் பதவியேற்ற பின்னர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாருக்கு அதிமுக துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பினார். ஆனால் தினகரனின் பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவே நேரடியாக மார்ச் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் கெடு இன்றுடன் முடிவடைவதை அடுத்து பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்திற்கு பின்னர் தேர்தல் ஆணையம் எடுக்கவுள்ள முடிவை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது

Leave a Reply