எடப்பாடி பழனிச்சாமி-தினகரனை இணைக்க சசிகலாவின் மாஸ்டர் பிளான்

எடப்பாடி பழனிச்சாமி-தினகரனை இணைக்க சசிகலாவின் மாஸ்டர் பிளான்

ஒருபக்கம் ஜிஎஸ்டி, கதிராமங்கலம் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தினகரன் அணி ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிச்சாமி அணி ஆதரவாளர்களும் வழக்கம் போல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் பொதுமக்கள் தமிழக அரசின் மேல் வெறுப்பில் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் அவ்வப்போது ஆளுங்கட்சியின் குறைகளை ஆவேசமாக வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து செயல்படவில்லை என்றால் ஆட்சிக்கும் கட்சிக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்த மன்னார்குடி உறவுகளும், அதிமுக மேல்மட்ட தலைவர்களும் சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி எடப்பாடி அணியிடம் பேச்சு நடத்தி சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதுபோல, டி.டி.வி.தினகரன் தரப்ப்பும் அமைதிகாக்க வேண்டும் என்று சில விஷயங்களை மத்தியஸ்தர்கள் கூறியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இந்தச் சமரசம் குறித்து ஜூலை முதல்வாரத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை மன்னார்குடி உறவுகள் சந்திக்கிறார்கள். அப்போது, சசிகலா சொல்லப்போகும் மாஸ்டர் பிளானை பொறுத்துதான் டி.டி.வி.தினகரனின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

Leave a Reply