சசிகலா கேட்பது நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. நீதிமன்றம் கண்டிப்பு

சசிகலா கேட்பது நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. நீதிமன்றம் கண்டிப்பு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா ஒரு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தார். இதன்படி அமலாக்கத்துறை தன்னிடம் கேட்கவுள்ள கேள்விகளை முன்கூட்டியே தரவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. ஆனால், சென்னை எழும்பூர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ‘கேள்விகளை முன்கூட்டியே தருவது என்பது நீதிமன்ற நடைமுறையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சசிகலா, தினகரன் ஆகியோர் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சிறையில் இருப்பதால் வழக்கில் நேரில் ஆஜராக இயலாது என்றும், காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சசிகலா வைத்த கோரிக்கையை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதே நேரத்தில் அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறை கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்கக்கோரி சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்தபோது, அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேள்விகளை முன்கூட்டியே தருவது என்பது நீதிமன்ற நடைமுறையில் கிடையாது என்று கூறிய நீதிபதி, சசிகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply