சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக களமிறங்குமா அரசியல் கட்சிகள்?

சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக களமிறங்குமா அரசியல் கட்சிகள்?

sasikalapushpajayaஅதிமுக தலைமையை இதுவரை அக்கட்சியின் ஆண் தலைவர்கள் கூட எதிர்த்ததாக வரலாறு கிடையாது. கட்சியை விட்டு நீக்கினால் கூட அமைதி காத்து வருவதைதான் இதுவரை கழகம் கண்டுள்ளது. ஆனால் முதல்முறையாக பெண் எம்பியான சசிகலாபுஷ்பா, அதிமுக தலைமையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகின்றார்.

சசிகலா புஷ்பா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்ததும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளது. இதனால் டெல்லியே கதியென்று இருக்கும் அவருக்கு கனிமொழி, குலாம்நபி ஆசாத், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் பின்புலமாக இருந்து வழிநடத்துகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியபோது, ‘தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் ஆதரவு இருப்பதால் சசிகலாபுஷ்பா தைரியமாக இருக்கிறார். தன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து உரிய நியாயம் கிடைக்கும் வரையில் தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க அவரும் விரும்பவில்லை. நேற்று காலை முதலே அ.தி.மு.கவுக்கு எதிரான அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த ஆதரவுக் கடிதத்தில், ‘ என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலியானவை என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நீங்கள் எல்லாம் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் சரியானவைதானா என ஆராயும்படி, அறிக்கை வெளியிடுங்கள். எனக்காகப் பேசுவதைவிடவும் எங்கள் சமுதாயத்தின் நலனுக்காகக் குரல் கொடுங்கள்’ என உருக்கமான வேண்டுகோளை வைக்கிறார்.

இந்த விவகாரத்தில், ராமதாஸ் போன்றவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தால், அ.தி.மு.க தலைமைக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும்’ என நம்புகிறார். அவரது அறிக்கையை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வருகிறோம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, ‘ எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, விசாரணை விவரங்களைத் தாக்கல் செய்யுங்கள்’ எனக் கேட்க இருக்கிறோம். நீதிமன்றத்தில் இந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டாலே பொய் வழக்கு என்பதை வெகு எளிதாக நிரூபிக்க முடியும் என்பதை நம்புகிறோம். ஆகஸ்ட் 22-ம் தேதிக்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சசிகலாவின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 22ஆம் தேதி விசாரணை செய்யப்படவுள்ளது. முதல்வருக்கு எதிரான ஆட்டத்தில், ‘ ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்ற கருத்தில் உறுதியாக இருக்கும் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் ஆகஸ்ட் 22 அன்று தெரிந்துவிடும்’ என்று கூறப்படுகிறது.

Leave a Reply