சீராய்வு மனு தள்ளுபடி, அடுத்தது சொத்துக்கள் முடக்கமா? சசிகலா அதிர்ச்சி

சீராய்வு மனு தள்ளுபடி, அடுத்தது சொத்துக்கள் முடக்கமா? சசிகலா அதிர்ச்சி

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைதண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்களின் சீராய்வு மனு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து மூவருக்கும் விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியை வசூல் செய்ய சொத்துக்களை முடக்கி அதன்பின்னர் அவை ஏலத்துக்கு கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட மறுநாள் சசிகலா இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply