நானும் ஜெயலலிதாவும் பயந்ததே இல்லை. நாங்கள் சிங்கங்கள். சசிகலா கர்ஜனை

நானும் ஜெயலலிதாவும் பயந்ததே இல்லை. நாங்கள் சிங்கங்கள். சசிகலா கர்ஜனை

ஈசிஆர் சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் அதிமுக எம்.எல்.ஏக்களை நேற்று இரண்டாவது நாளாக நேரில் சென்று அதிமுகவின் தற்காலிக செயலாளர் சசிகலா சந்தித்தார். எம்.எல்.ஏக்கள் மத்தியில் அவர் பேசியபோது ஜெயலலிதாவும், நானும் பெண் சிங்கங்கள்; நாங்கள் பயந்ததாகச் சரித்திரம் கிடையாது,’’ என்று கர்ஜித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் மறு உருவம் நான். அவரின் ஆன்மா என்னோடு எப்போதும் இருக்கிறது. அது ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து, நல்லாட்சி நடத்தி, என் பெயரை காப்பாற்று எனக் கதறிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆன்மாவின் ஆசையை நான் நிறைவேற்றுவேன்.

நான் மற்றும் அம்மா ஜெயலலிதா இருவருமே எதற்கும் பயந்தவர்கள் அல்ல. நாங்கள் சென்னை சிறையையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு சிறையையும் பார்த்திருக்கிறோம். பெண்தானே எனச் சிலர் மிரட்டிவருகின்றனர். அவர்களின் சலசலப்புக்கு நான் அஞ்ச மாட்டேன். இவற்றை நான் 30 ஆண்டுகளாகப் பார்த்து, சமாளித்து வருகிறேன்.

எத்தனை பேர் பிரச்னை கொடுத்தாலும், அவர்களை எளிதாக சமாளித்து, வீழ்த்திக் காட்டுவேன். அதற்கு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தரவேண்டும். உங்கள் ஆதரவு இருந்தால் போதும். மற்ற அனைத்து பிரச்னைகளையும் நான் மிகச் சாதாரணமாகக் கடந்து மேலே வந்துவிடுவேன். எளியவர்களின் கட்சி அதிமுக. அது என்றைக்கும் நிலைத்து நிற்கும். இவ்வாறு சசிகலா பேசினார்.

சசிகலா கர்ஜிக்கும் வகையில் பேசினாலும் அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply