இன்று பதவியேற்பா? திடீர் ஒத்திவைப்பா? சசிகலாவின் முதல்வர் கனவு கானல் நீரா?
ஒருபக்கம் சசிகலா முதல்வர் பதவியை இன்று ஏற்பார் என்றும் அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சசிகலா முதல்வர் பதவியை ஏற்றால் மாநிலத்தில் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் ஏற்படும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் கருதுவதாகவும், இதனால் இன்று பதவிப்பிரமாணம் அவர் செய்து வைக்க மாட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிமிடம் வரை கவர்னர் இதுகுறித்து இறுதி முடிவை எடுக்க வில்லை என்றும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் மீதும் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்த வழக்கின் மீது இன்னும் ஒரு வார காலத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால், தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும்பட்சத்தில், மீண்டும் தமிழகத்தில் நிர்வாக சிக்கல்கள் ஏற்படக் கூடாது என்பதில் கவர்னர் கவனமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இன்று கோவையில் பாரதியார் பலகலைக்கழக விழாவில் கலந்து கொள்ளவிருந்த கவர்னர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பியிருந்தாலும் அவர் சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பாரா? இல்லையா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்