அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்தக் கூடாது: ஓ.பி.எஸ் அணி அதிரடி
இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது என்பதையும் இரு அணிகளும் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என்பதையும் சில நிமிடங்களுக்கு முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் சின்னம், அதிமுக பெயர் முடக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தையும் சசிகலா அணியினர் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் சொத்து முதல் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் வரை சசிகலா தரப்பு பயன்படுத்தி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினர்களின் இந்த அதிரடி நடவடிக்கை சசிகலா தரப்பினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.