நான் நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி கவிழ்ந்துவிடும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மிரட்டல்

நான் நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி கவிழ்ந்துவிடும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மிரட்டல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் தினகரன் பொறுப்பில் அதிமுக சசிகலா அணி தற்போது உள்ளது. இந்த அணிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்

இந்த நிலையில் நேற்று சாமளாபுரம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்த தொகுதியின் எம்.எல்.ஏ கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்வேன். நான் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். என் தொகுதி மக்கள் சம்பாதிப்பார்கள், சம்பாதிக்கட்டும்

ஆனால் நான் ஒருவன்ம் ராஜினாமா செய்தால் ஆட்சியின் பலம் குறையும், அதனால் ஆட்சி கலையும் நிலையும் ஏற்படலாம். ஆட்சி கலைந்தால் கலையட்டும்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Leave a Reply