ஒரு வாரத்திற்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு வாரமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்து வெளியே வராமல் ஜெயலலிதாவை கவனித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றிரவு முதல்முறையாக மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து நேற்றிரவு முதல் ஒருசில விஷமிகள் வதந்தியை கிளப்பி விடும் நிலையில் சசிகலா மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சசிகலா எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே அவர் ஓய்வு எடுப்பார் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.