சசிகலாவுக்கு ஆதரவு திரட்ட டெல்லியில் வட்டமிடும் நடராஜன்?
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை போட்டியின்றி அனைவரின் சம்மதத்துடன் கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு பெரும்பாலான அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஆதரவு கொடுத்துவிட்டபோதிலும், ஒருசிலர் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பி.எச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன், JCT பிரபாகரன் ஆகியோர் சசிகலாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிது வருகின்றார்களாம்.
இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் டெல்லி சென்றும் பல முக்கிய தலைவர்களை சந்தித்து சசிகலாவுக்கு ஆதரவு திரட்டுவதாக கூறப்படுகிறது.