மோடியின் ரசிகராக மாறிய சசிதரூர். அதிர்ச்சியில் காங்கிரஸ்

8பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாரதிய ஜனதாவையும், நரேந்திரமோடியையும் கடுமையாக விமர்சனம் செய்துவந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசிதரூர், சமீபகாலமாக மோடியின் புகழ்பாடும் நபராக மாறிவிட்டார். இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான சசிதரூர், தேர்தலுக்கு முன்பு மோடியின் மதவாதம் குறித்தும், பாரதியஜனதாவின் வன்முறை அரசியல் குறித்தும் தனது டுவிட்டரில் வசைபாடி வந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக தேர்தலுக்கு பின்னர் மோடியை ஒரு ஆக்கபூர்வமான தலைவர் என அதே டுவிட்டரில் மோடிக்கு புகழுரை கூறியுள்ளார்.

அமெரிக்க இணையதளம் ஒன்றுக்காக சசிதரூர் எழுதிய கட்டுரை ஒன்றில் “புதிய அரசின் உயர்மட்டத் தலைவரிடமிருந்து (மோடி) வெளிப்படும் ஆக்கப்பூர்வமான பேச்சும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் மெச்சத்தக்கதாக உள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மற்றும் ஒத்துப்போகும் இயல்புடைய இந்த பேச்சை, எதிர்க்கட்சிகள் அலட்சியப்படுத்திவிட்டு காட்டுமிராண்டித்தனமாக இருக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை தாம் ‘1.0’  என்ற முன்பு மதிப்பிட்டிருந்ததாகவும், தற்போது அதற்குப்பதிலாக மோடியின் செயல்பாட்டை ‘2.0’ என உயர்த்தி மதிப்பிடுவதாகவும் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

சசிதரூரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஸா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “மோடி குறித்து சசி தரூர் கூறியுள்ள கருத்து அவரது சொந்த கருத்து என்றும், அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.

Leave a Reply