சத்யராஜ் உடல்நிலை குறித்து சிபிராஜ் டுவிட்!

நடிகர் சத்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து நடிகர் சிபிராஜ் தனது டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தந்தை சத்யராஜ் தற்போது முழுமையாக குணமாகி விட்டதாகவும் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாகவும் அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் நடிகர் சிபிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் தனது தந்தை தனது வழக்கமான பணியை தொடர்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.