சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என்று ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. தற்போது குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் குறித்த ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சக்ரவர்த்தி வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பில் முக்கிய குற்றவாளியான ராமலிங்கராஜூவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
சத்யம் நிறுவனத்தின் வரவு – செலவு கணக்கில் லாபத்தை அதிகரித்து காட்டி பங்குதாரர்களிடம் இருந்து பெரும் தொகையை மோசடி செய்ததாகவும், இதன் மூலம் சத்யம் நிறுவன பங்குதாரர்களுக்கு ரூ.14.162 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான சத்யம் தலைவர் ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.