செஸ் விளையாட்டிற்கு சவுதி அரேபியா தடை. பொதுமக்கள் அதிருப்தி

செஸ் விளையாட்டிற்கு சவுதி அரேபியா தடை. பொதுமக்கள் அதிருப்தி
chess
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் விரும்பி விளையாடும் விளையாட்டு செஸ் எனப்படும் சதுரங்கம். மூளைக்கு வேலை தரும் இந்த விளையாட்டில் நம் நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவுதி அரேபியா நாடு இந்த செஸ் விளையாட்டை அதிரடியாக தடை செய்துள்ளது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, செஸ் விளையாட்டால் மக்களின் நேரம் வீணாவது மட்டுமின்றி இது ஒரு வேஸ்ட்டான விளையாட்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த விளையாட்டில் சூதாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

மக்களின் மனதில் மன அழுத்தத்தை இந்த விளையாட்டு அதிகரிப்பதாகவும், இனிமேல் சவுதி அரேபியாவில் எந்த செஸ் விளையாட்டு போட்டிகளும் நடைபெற அனுமதிக்கப்படாது என்றும் அரசு உத்தரவு இட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியா நாட்டில் உள்ள செஸ் பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஈரானில் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் செஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: Saudi Arabia bans Chess because it is `a waste of time and encourages gambling

Leave a Reply