ரூ.7 லட்சம் கோடி ஊழல் பணம்: அரச குடும்பத்தில் இருந்து பறிமுதல் செய்த சவுதி அரேபிய அரசு
சவுதி அரேபியாவின் 32 வயது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களில் மட்டும் அரச குடும்பத்தினர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் கோடி ஊழல் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர்கள் தான் அதிகளவு ஊழலில் ஈடுபடுவதாக முதலில் கண்டறிந்த இளவரசர் முகமது பின் சல்மான், தயவுதாட்சம் இன்றி மன்னர் குடும்பத்தினர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தார்
ஊழல் குறித்து 381 பேர்களிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும், இந்த விசாரணையின் இறுதியில் ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து ரூ.7 லட்சம் கோடி ரொக்கம் உள்பட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.